ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

அண்ணாமலை சீசன் அரசியல்வாதி.. மைக் கிடைக்கிறதே எனப்பேசுபவர்.. அமைச்சர் எம்.கே.ஆர்.பன்னீர்செல்வம் விமர்சனம்

அண்ணாமலை சீசன் அரசியல்வாதி.. மைக் கிடைக்கிறதே எனப்பேசுபவர்.. அமைச்சர் எம்.கே.ஆர்.பன்னீர்செல்வம் விமர்சனம்

அண்ணாமலை - எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

அண்ணாமலை - எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தலைவர் பதவிக்கு தகுதி இல்லாதவரை பாஜக மாநில தலைவராக நியமித்துள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.செந்தில்குமார், முன்னிலையில் பஞ்சப்பள்ளி பகுதியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா மற்றும் அப்பகுதியில் புதியதாக நடைபெற்று வரும் இலங்கை அகதிகளுக்கான 50 குடியிருப்புகள் பணிகளை இன்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து பஞ்சப்பள்ளியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  " மைக் கிடைக்கிறேதே என்று பேசுபவர் அண்ணாமலை. அவர் ஒரு அரசியல்வாதியே இல்லை. சீசன் அரசியல்வாதி. கர்நாடகாவில் காவல்துறையில் பணியாற்றியபோது, தமிழகத்திற்கு காவிரி நீர் விடக்கூடாது என பேசியவர். அண்ணாமலை தலைவருக்கே தகுதியில்லாதவர். தகுதியில்லாதவர்களை தலைவராக கொண்டு வந்திருக்கிறார்கள்.

பாஜக கட்சிக்கு கொள்கையும் கிடையாது, ஒன்றும் கிடையாது, பேசி பேசியே கட்சியை வளர்த்து வருகின்றனரே தவிர வேறு ஒன்றும் கிடையாது. அண்ணாமலை எல்லா தொழிலதிபர்களையும் மிரட்டி வருகிறார். அவர் பாணியே மிரட்டல் பாணி, யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளையும், மற்றவர்களையும் மிரட்டி வருகிறார்கள். அது தமிழகத்தில் எடுபடாது” என்றார்.

மேலும் பேசியவர் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் புளோரைடு இல்லாத தூய்மையான குடிநீர் பருகிட கலைஞர் ஆட்சி காலத்தில்  கொண்டு வரப்பட்ட திட்டம் தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். இரண்டாவது கட்ட  திட்ட பணிகளுக்கான ஆய்வுகள் நடந்து வருகின்றது. பணிகள் முடிந்த பின்னர் முதலமைச்சர் அவர்கள் திட்டத்தினை தொடங்கி வைப்பார்கள். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எழுபது சதவீத வாக்குறுதிகளை, திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்.”என்றார்.

செய்தியாளர்: ஆர்.சுகுமார் (தருமபுரி)

First published:

Tags: Annamalai, BJP, DMK