முகப்பு /செய்தி /தர்மபுரி / மின்கம்பியில் பீரோ உரசியதில் 3பேர் உயிரிழப்பு - தருமபுரியில் சோகம்

மின்கம்பியில் பீரோ உரசியதில் 3பேர் உயிரிழப்பு - தருமபுரியில் சோகம்

தருமபுரி

தருமபுரி

மின்சாரம் பாய்ந்து மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரி அருகே வீட்டை காலி செய்யும் போது மின்கம்பியில் இரும்பு பீரோ உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தருமபுரி நகரை ஒட்டியுள்ள சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 2வது மாடியில் இலியாஸ் பாஷா மற்றும் இவரது மனைவி சிராஜ் ஆகியோர் கடந்த 9 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் வெளியூரில் வேலை பாரத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இலியாஸ் தான் குடியிருந்த பச்சியப்பன் வீட்டில் இருந்து காலி செய்து மற்றொரு வீட்டிற்கு குடியேற வீட்டில் இருந்த பொருட்களை மினிலாரி ஓட்டுனர் கோபி என்பவரை வரவழைத்து தனது 2 வது மாடியில் இருந்து கயிறு கட்டி பொருட்களை கோபியின் நண்பர் குமார் மற்றும் வீட்டின் உரிமையாளர் பச்சியப்பன் ஆகியோரின் உதவியுடன் இறக்கி உள்ளனர்.

இதையும் படிங்க : துணைப் பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை முடிவு?

அப்போது வீட்டின் அருகே சென்ற மின்கம்பியில் இரும்பு பீரோ உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இலியாஸ் மற்றும் ஓட்டுனர் கோபி உயிரிழந்தனர். விபத்து குறித்து அருகே இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து இதில் காயமடைந்த பச்சியப்பன் மற்றும் குமாரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பச்சியப்பன் உயிரிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பலத்த காயமடைந்த குமாருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.  இதுகுறித்து மதிகோண்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரியில் வீடு காலி செய்யும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் : சுகுமார் ரங்கநாதன்

First published:

Tags: Dharmapuri, Local News, Shocks