Home /News /dharmapuri /

தருமபுரியில் தாய், இரண்டு குழந்தைகள்  கிணற்றில் சடலமாக மீட்பு... குடும்ப தகராறு காரணமா?

தருமபுரியில் தாய், இரண்டு குழந்தைகள்  கிணற்றில் சடலமாக மீட்பு... குடும்ப தகராறு காரணமா?

கிணற்றில் இறங்கி தேடும் பணியில் போலீசார்

கிணற்றில் இறங்கி தேடும் பணியில் போலீசார்

Dharmapuri | மாரண்டஹள்ளி அருகே தாய், இரண்டு குழந்தைகள்  கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். இது கொலையா? அல்லது தற்கொலையா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dharmapuri, India
    தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த தொட்டபாவளி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன்-லட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு பிரசாந்த் (4) என்ற மகனும் லதா என்ற 6 மாதம் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன், லட்சுமி தனது இரு குழந்தைகளுடன் வீட்டு விட்டு வெளியில் சென்றதாக கூறி, அவரது உறவினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். நேற்றிரவு அருகே இருந்த கிணற்றை க பார்த்த போது, அதில் லட்சுமி மற்றும் 2 குழந்தைகள் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதனை தொடர்ந்து மாரண்டஹள்ளி காவல் நிலையத்திற்கும், பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
    தகவல் அறிந்த மாரண்டஹள்ளி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் இருந்த 3 உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துமனை மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    Also see... தமிழகத்தில் 4 நாட்கள் பாத யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்

    இந்த சம்பவம் குறித்த மாரண்டஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Child, Crime News, Dharmapuri, Mother

    அடுத்த செய்தி