முகப்பு /செய்தி /தர்மபுரி / புரட்டாசி எஃபெக்ட்: ஞாயிற்றுகிழமையில் கூட வெறிச்சோடி இருக்கும் கறிக்கடைகள்; உழவர் சந்தையில் குவிந்த மக்கள்!

புரட்டாசி எஃபெக்ட்: ஞாயிற்றுகிழமையில் கூட வெறிச்சோடி இருக்கும் கறிக்கடைகள்; உழவர் சந்தையில் குவிந்த மக்கள்!

கறிக்கடை, உழவர் சந்தை

கறிக்கடை, உழவர் சந்தை

புரட்டாசி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலானோர் புரட்டாசி விரதம் கடைபிடித்து வருகின்றனர். 

  • Last Updated :
  • Dharmapuri, India

புரட்டாசி மாதம் தொடங்கியதால் தருமபுரியில் இறைச்சி கடைகள், வெறிச்சோடி காணப்படுகின்றன, அதே சமயம் காய்கறிகள் வாங்க மக்கள் உழவர் சந்தையில் குவிந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில்  பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி பிரியர்களின் கூட்டம் அலைமோதும். குறிப்பாக மட்டன் மற்றும் சிக்கன் கடைகளில் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு கறி வாங்குவது வழக்கம். இதனால் ஞாயிற்றுகிழமைகளில் இறைச்சி கடைகளில் விற்பனை அமோகமாக இருக்கும்.

புரட்டாசி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலானோர் புரட்டாசி விரதம் கடைபிடித்து வருகின்றனர்.  இறைச்சி உணவை அதிகம் தவிர்க்கப்படுவதால், புரட்டாசி முதல் நாளான இன்று தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் நகர் பகுதியில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், மீன்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. மேலும் இறைச்சி வாங்காததால், காய்கறிகள் வாங்க உழவர் சந்தையில்  பொதுமக்கள் குவிந்தனர். இதனால் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை அமோகமாக இருந்தது.

இதையும் வாசிக்க: தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

மேலும் இந்த மாதம் முழுவதும் உள்ள நான்கு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இறைச்சி விற்பனை என்பது குறைவாகவே இருக்கும் என இறைச்சி கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Meat, Purattasi, Vegetable