ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

படிக்கும்போதே காதல்.. லெஸ்பியன் உறவுக்கு எதிர்ப்பு.. போலீஸ் ஸ்டேஷனில் கழுத்தை அறுத்துக் கொண்ட இளம்பெண்!

படிக்கும்போதே காதல்.. லெஸ்பியன் உறவுக்கு எதிர்ப்பு.. போலீஸ் ஸ்டேஷனில் கழுத்தை அறுத்துக் கொண்ட இளம்பெண்!

லெஸ்பியன் உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி தற்கொலை

லெஸ்பியன் உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி தற்கொலை

lesbian suicide attempt | கல்லூரி மாணவிகளுக்குள் ஏற்பட்ட காதல் விவகாரம், பிரிய மனம் இல்லாத மாணவி காவல் நிலைய கழிவறையில் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Dharmapuri, India

  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஏர்கோல்பட்டியைச் சேர்ந்த  சிவபிரகாஷ் என்பவரின் மகள் சபீலா(21). இவரை காணவில்லை என்று சிவபிரகாஷ் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் ஏரியூர் அருகே உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருடைய மகள் தரண்யா (22). இவர் ஷபிலாவை கோயம்பத்தூர் அழைத்துக் கொண்டு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் கோயம்புத்தூர் சென்று இருவரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

  விசாரணையில் தரண்யா நங்கவள்ளி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பயோ டெக்னிக்கல் முடித்துவிட்டு கோயம்புத்தூரில் டைட்டில் பார்க்கில் பயிற்சியில் இருப்பதாகவும் அதே கல்லூரியில் சபீலா பிஎஸ்சி பயோ டெக் மூன்றாம் வருடம் படித்து வந்ததாகவும் தெரியவந்தது. , இந்நிலையில் இருவரும் ஏரியூரில் இருந்து கல்லூரி வாகனத்தில் தினமும் சென்று வந்த பொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

  இது சம்பந்தமாக சபீலாவின் குடும்பத்தார் கடந்த இரண்டு மாதங்களாக கல்லூரிக்கு அனுப்பாமல்  வீட்டிலேயே வைத்துள்ளனர். ஷபிலா தரண்யாவை காண்பதற்காக கடந்த 30-ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு கோயம்புத்தூருக்கு சென்றுள்ளார்.

  பிறகு கோயம்புத்தூரிலிருந்து இருவரும் சென்னை உள்ளிட்ட இடங்களில் சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

  நேற்று  காவல்துறையினர் அழைத்து வந்து விசாரித்து இருவரையும் அவர்களது பெற்றோர்களிடத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த இரண்டு பெண்களுக்கும் கவுன்சிலிங் கொடுப்பதற்காக பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

  ஆய்வாளர் வான்மதி இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்துள்ளார்.

  இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து போக முடியாது என்றும் நாங்கள் இருவரும் ஒன்றாக தான் வாழ்வோம் என்றும் கூறி, தரண்யா காவல் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதாக சென்று,

  தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் வலது கை, கழுத்து  பகுதிகளில் கிழித்து கொண்டுள்ளார்.

  Also see... தமிழகம் வரும் பிரதமர் மோடி.. போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் திண்டுக்கல்

  இதை பார்த்த காவல்துறையினர் உடனடியாக மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: College girl, College student, Dharmapuri, Love, Suicide attempt