முகப்பு /செய்தி /தர்மபுரி / வெள்ளக்காடாக மாறிய ஓகேனக்கல்.. 25-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

வெள்ளக்காடாக மாறிய ஓகேனக்கல்.. 25-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஒகேனக்கல்

ஒகேனக்கல்

cauvery River flood | காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1.35லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

கர்நாடக, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

மேலும் இன்று காலை நிலவரப்படி கபினி 9,250 கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 35,629 கன அடி என மொத்தம் 44,879 கன அடியாக தண்ணீர் அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக  காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 45,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 50,000 கன அடியாக இருந்தது. நேற்று நண்பகலில் மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 70,000, 80,000 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து மாலை 1,10,000 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 1,35,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகள் உள்ளிட்டவைகளை தண்ணீர் மூழ்கடித்து, பாறைகள் தெரியாதளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று 25-வது நாளாக  ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடித்து வருகிறது.

Also see... கனமழை எச்சரிக்கை: நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு

மேலும் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக பிலிகுண்டுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி

First published:

Tags: Cauvery River, Dharmapuri, Flood