ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

மீண்டும் பெய்த கனமழையால் ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக உயர்ந்தது...

மீண்டும் பெய்த கனமழையால் ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக உயர்ந்தது...

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக உயர்வு

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக உயர்வு

Dharmapuri | காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக இரண்டாவது நாளாக நீடிக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Dharmapuri, India

  கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,500 கனஅடி தண்ணீர் வந்தது.

  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ,000 கனஅடியாக அதிகரித்தது. இன்று இரண்டாவது நாளாக  அதே நிலையில் நீர்வரத்து உள்ளது.

  இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும், கூடுவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.

  Also see...மாணவர்களுக்கு வெற்றி அடையும் வழியை கூறிய பிடிஆர்...

  பரிசல் இயக்க அனுமதி வழங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மட்டும் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Cauvery River, Dharmapuri, Heavy Rainfall