முகப்பு /செய்தி /தர்மபுரி / ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Hogenakkal | ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து மூன்றாவது நாளாக வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. கரையோர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

கர்நாடக மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 32,360 கனஅடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து தொடர்ந்து மூன்றாவது நாட்களாக உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

Also see... திருத்தணியில் தி.மு.க பிரமுகர் வெட்டி படுகொலை....

மேலும் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய் துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி

First published:

Tags: Cauvery water, Dharmapuri, Flood, Kerala