முகப்பு /செய்தி /தர்மபுரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு.. சினி ஃபால்ஸ், ஐந்தருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு.. சினி ஃபால்ஸ், ஐந்தருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

 ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி

Dharmapuri | தமிழக கர்நாடகா எல்லையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Dharmapuri, India

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலில் நேற்று வினாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 35,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதன்காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள மெயின் அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிச் செல்கின்றன. இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்ல அனுமதி வழங்கும் எனவும் அருவிகளில் குளிக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.

Also see... கிருஷ்ணகிரியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்... பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை - யானைகளை விரட்டும் பணி தீவிரம்

தமிழக கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே பெய்த கன மழையின் காரணமாக தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி

top videos
    First published:

    Tags: Cauvery River, Dharmapuri, Water