ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

தமிழ்நாடு மிஸ்ஸிங்.. லோகோ இல்லை.. ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் மாற்றம்! அடுத்த பரபரப்பு

தமிழ்நாடு மிஸ்ஸிங்.. லோகோ இல்லை.. ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் மாற்றம்! அடுத்த பரபரப்பு

ஆளுநர் மாளிகை அழைப்பிதழ்

ஆளுநர் மாளிகை அழைப்பிதழ்

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையும், இலச்சினையும் தவிர்க்கப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தின. இந்த சூழலில் நேற்று சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு அரசு என்பதற்கு பதிலாக இந்த அரசு எனக் குறிப்பிட்டார். இதற்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் முன்மொழிந்த நிலையில், ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார்.

இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் முன்பே, பொங்கல் விழாவுக்காக ஆளுநர் மாளிகை அனுப்பிய அழைப்பிதழ் மீண்டும் ஒரு சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து அளித்தது. தமிழ்நாடு அரசின் இலச்சினை அதில் இடம்பெற்றதோடு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என பெயர் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் நாளை மறுநாள் ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது. அதற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதில் இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றிருந்தது. இதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது.

இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருக்கிறது.நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு

இவர் வெளியேற்றப்பட வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

First published:

Tags: RN Ravi, Tamilnadu