ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

தமிழ்நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போதைப் பொருள் கலாச்சாரம் - ஜி.கே.மணி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போதைப் பொருள் கலாச்சாரம் - ஜி.கே.மணி குற்றச்சாட்டு

ஜி.கே மணி போராட்டம்

ஜி.கே மணி போராட்டம்

தமிழகம் முழுவதும் போதை பொருட்களுக்கு எதிராக பாமக போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாமக சார்பில் ஜி.கே.மணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Dharmapuri, India

  தமிழகத்தில் அதிகரிக்கும் போதை பொருட்களுக்கு எதிராக பாமக சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் நடக்கும் போராட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி நடத்தினார்.

  இந்நிலையில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாமக சார்பில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி இன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாட்டில் குக் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை அனைத்து பள்ளி, கல்லூரி வாசல்களிலும் கஞ்சா சாக்லேட் அமோகமாக விற்பனையாகிறது என குற்றச்சாட்டினார்.

  மேலும், அவர், ‘தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருள் கலாச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைக்கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது.

  தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1.70 கோடி மாணவர்களில்  10 விழுக்காட்டினர், அதாவது 17லட்சம் பேர் போதைப் பழக்கத்திற்குஆளாகியிருக்கின்றனர். என்பதும், மூன்றரை லட்சம் பேர் போதைக்கு ஆளாவதற்கு போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது தான் காரணம் என்பதும் எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயங்கள் இல்லை.

  போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் தமிழகத்தின் எதிர்காலமாக கருதப்படும் இளைஞர் சமுதாயம் பெரும் சுமையாக மாறிவிடக்கூடும். இதை தடுக்க வேண்டும்’ என சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜி.கே. மணி வலியுறுத்தினார்.

  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தருமபுரி எம்.எல்.ஏ. எஸ். பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  தருமபுரி செய்தியாளர்: ஆர்.சுகுமாா்

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Dharmapuri, PMK