Home /News /dharmapuri /

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு...

Dharmapuri | நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்க தடை நீடிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Dharmapuri, India
    கனமழை மற்றும்  கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த மாதம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனிடையே மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9000 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால் கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு  28,376 கனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதனால்  ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28,000 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வந்தனர்.

    இதனிடையே நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது. மாலை 6 மணி அளவில் நீர்வரத்து 57,000 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 70,000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை தண்ணீர் சூழ்ந்து செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு பணியினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

    Also see... ஆவணி அமாவாசை... மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளார். மேலும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cauvery River, Dharmapuri, Flood

    அடுத்த செய்தி