Home /News /dharmapuri /

தர்மபுரியில் வெள்ளத்தில் சிக்கிய முதிய தம்பதியினரை கயிறுகட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்...

தர்மபுரியில் வெள்ளத்தில் சிக்கிய முதிய தம்பதியினரை கயிறுகட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்...

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மீட்பு குழு - தர்மபுரி

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மீட்பு குழு - தர்மபுரி

Dharmapuri | காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 இலட்சம் கன அடி தண்ணீர் வரும் நிலையில், ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயில் அருகில் பாலமுருகன் கோவில் உள்ளது. அதன் அருகில் வசித்து வந்த, குருசாமி-பங்காரு என்ற முதிய தம்பதியினரை வெள்ளம் சூழ்ந்த நிலையில், தீயணைப்பு துறையினர் அவர்களை பாதுகாப்பாக  மீட்டனர்.

மேலும் படிக்கவும் ...
     காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது இரண்டு லட்சம் கன அடியாக நீர்வரத்து செல்வதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது. 

    ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதையின் பென்னாகரம் அருகேயுள்ள அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்த குருசாமி, பங்காரு அம்மாள் ஆகிய வயது முதிர்ந்த தம்பதி பாலமுருகன் கோவில் அருகில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் அவர்களை வெள்ளம் சூழ்ந்த நிலையில் வெளியே வர மறுத்து உள்ளேயே இருந்தனர். மீண்டும் வெள்ளம் அதிகரித்தால் இவர்களால் வெளியேற முடியாது என்ற ஒரு சூழ்நிலை உருவாகியது.
    தகவலறிந்து வந்த காவல்துறையினர்,  தீயணைப்பு மீட்பு குழுவினர், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் கொட்டும் மழை என்று பாராமல் தம்பதியினரை துரிதமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு இருவரையும் பத்திரமாக மீட்கப்பட்னர்.

    Also see... தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்.. மேலும் 2 பேர் கைது

    சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி நடைபெற்று இருவரும் மீட்கப்பட்டனர்.

    செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dharmapuri, Flood

    அடுத்த செய்தி