Home /News /dharmapuri /

தர்மபுரியில் பைக் ஷோரூமில் தீ விபத்து.. புதிய பைக்குகள் தீயில் எரிந்து நாசம்.. அருகில் பெட்ரோல் பங்க் இருந்ததால் பதற்றம்..

தர்மபுரியில் பைக் ஷோரூமில் தீ விபத்து.. புதிய பைக்குகள் தீயில் எரிந்து நாசம்.. அருகில் பெட்ரோல் பங்க் இருந்ததால் பதற்றம்..

தர்மபுரியில் பைக் ஷோரூமில் தீ விபத்து..

தர்மபுரியில் பைக் ஷோரூமில் தீ விபத்து..

Dharmapuri District : அரூரில் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அரூர் சேலம் பிரதான சாலையில் சுமார் மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டானாவில், சேலம் பிரதான சாலையில் தரைதளத்துடன் கூடிய, மூன்றடுக்கு கட்டிடம் உள்ளது. இதில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் உதிரி பாகங்கள், சர்வீஸ் ஷோரூம் உள்ளது. இரண்டாம் தளத்தில், தனியார் நிதி நிறுவனம், மூன்றாம் தளத்தில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

    மொரப்பூர் பகுதியை சேர்ந்த மாதையன் என்பவர் இந்த இருசக்கர விற்பனையகத்தை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல், வேலையை முடித்துக் கொண்டு பணியாளர்கள் கிளம்பிச் சென்றுள்ளனர்.  இதன் பின்னர் மின் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    அப்பொழுது பூட்டிய கட்டிடத்தில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதனையறிந்த இருசக்கர வாகன விற்பனை நிலைய ஊழியர்கள், கதவை திறக்க முயற்சித்துள்ளனர். ஆனால் திறக்க முடியாததால், அரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை திறந்தனர்.

    அப்பொழுது தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்த மூன்று அடுக்குமாடி கட்டடங்களில் வேகமாக தீ பரவ தொடங்கியது. ஷோரூமிற்கு மேல்மாடியில் சிக்கியிருந்த தனியார் நிதி நிறுவன பணியாளர்கள் 5 பேரை தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

    ஆனால் தீ மளமளவென பரவி புதிய இருசக்கர வாகனங்கள், உதிரி பாகங்கள், கணினி உள்ளிட்டவற்றில் பரவி எரிந்தது. இதனையறிந்த தீயணைப்பு வீரர்கள் அருகில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து கூடுதல், தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து  தீயை அணைக்க முயற்சித்தனர்.

    தீ பற்றிய மூன்று மாடி கட்டிடம்


    சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடினர். ஆனால் ஷோரூமில் இருந்த அனைத்தும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில், விலையுயர்ந்த  7 புதிய இருசக்கர வாகனங்கள், உதிரி பாகங்கள், கணிணி, உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

    அதேசமயத்தில் தீப்பற்றி எரிந்த ஷோரூம் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர். அதேபோல், தீ விபத்து நடந்த பகுதி அருகே இருந்த பெட்ரோல் விற்பனை நிலையம் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்பட்டது.

    Also see... பள்ளி குழந்தைக்கு சான்றிதழ் வழங்க அலைய வைக்கும் அரசு இ சேவை மையம்.. ஆட்டோ ஓட்டுனர் குமுறல்..

    அரூரில் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அரூர் சேலம் பிரதான சாலையில் சுமார் மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும்  போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. இந்த தீ விபத்து அரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Bike, Dharmapuri, Fire accident

    அடுத்த செய்தி