ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகள்.. அருகில் சென்று ’பல்பு’ வாங்கிய பொதுமக்கள்.. தர்மபுரியில் ரூசிகர சம்பவம்..

சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகள்.. அருகில் சென்று ’பல்பு’ வாங்கிய பொதுமக்கள்.. தர்மபுரியில் ரூசிகர சம்பவம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Dharmapuri News : அரூர் அருகே வனப்பகுதியில் சாலையோரம் சிதறி கிடந்த ரூபாய் நோட்டு மாதிரி தாள்களை முண்டியடித்து எடுத்துச்சென்ற பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dharmapuri, India

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி வனப்பகுதியில் உள்ள காட்டு மாரியம்மன் கோயில் அருகே ரூ.2000, ரூ.200, ரூ.100, ரூ.10  நோட்டுகள் மாதிரியான குழந்தைகள் விளையாடும் கலர் தாள்களை மர்ம நபர்கள் வீசி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த கலர் தாள்கள் சாலையிலும், சாலையோரத்திலும் சிதறி கிடந்தது. இதனால் சாலையில் பயணம் செய்த சிலர் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடக்கிறது என நினைத்து அந்த தாள்களை முண்டியடித்துக்கொண்டு எடுத்துச்சென்றனர்.

அப்போது தாள்களை கையில் எடுத்த பிறகு அது குழந்தைகள் விளையாடும் கலர் தாள்கள் என தெரியவந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனாலும் ரூபாய் நோட்டுகள் போலவே இருந்ததால் அங்கு வந்த பெரியவர்களும், சிறியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு சிதறி கிடந்த கலர் தாள்கள் முழுவதையும் எடுத்துச்சென்றனர். மேலும் ரூ.2000, ரூ.200, ரூ.100, ரூ.10 நோட்டுகள் போலவே, கலர் தாள்கள் இருந்தது.

இதில் ரூ.2000 தவிர மற்ற தாள்களை கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவதைப்போல விடுவதற்கான வாய்ப்புகளும் இருந்து வருகிறது. தாள்கள் சாலையோரமும், சாலையிலும் சிதறிக் கிடந்ததால், சாலையில் பயணித்த அனைவரும் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடப்பதாக நினைத்து ஏமாந்து போயினர். சிதறிக்கிடந்த தாள்களை சிலர் முண்டியடித்துக் கொண்டு எடுத்ததால் சிறிது நேரம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் : சுகுமார் - தர்மபுரி

First published:

Tags: Dharmapuri, Local News