முகப்பு /செய்தி /தர்மபுரி / நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு கார் பரிசாக வழங்கிய பள்ளி நிர்வாகம்

நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு கார் பரிசாக வழங்கிய பள்ளி நிர்வாகம்

காரை பரிசாக வழங்கிய நிர்வாகம்

காரை பரிசாக வழங்கிய நிர்வாகம்

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் பள்ளி மாணவன் சர்வேஷ்-க்கு பள்ளி தலைவர் டி.என்.சி. இளங்கோவன் கார் பரிசு வழங்கி பாராட்டினார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் பள்ளி மாணவன் சர்வேஷ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவனுக்கு பரிசாக கார் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தி விஜய் மில்லினியம் சீனியர் செகண்டரி பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் சார்பில் விஜய்ஸ் ஏஸ் அகாடமி என்னும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் உயர்கல்வி படிக்கும் ஏழை, நடுத்தர மாணவ, மாணவிகளுக்கும், அரசு வேலைவாய்ப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read : பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் தர்மபுரி பென்னாகரம் மெயின் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் சி.பி. சர்வேஷ் 720-க்கு 635 மதிப்பெண்கள் பெற்று தர்மபுரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்த பயிற்சி மையத்தில் படித்த 9 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக 5 பேர் தலைசிறந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்த மையத்தில் தேர்வு எழுதிய 90 பேரில் 81 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 90 சதவித தேர்ச்சி பெற்று இந்த பயிற்சி மையம் சாதனை படைத்துள்ளது. இந்த தேர்வில் இயற்பியல் பாடத்தில் 98.35 சதவீதமும், வேதியலில் 99.3 சதவீதமும், உயிரியலில் 99.87 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் சர்வேஷ்-க்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. இளங்கோவன் ரூ.7.50 இலட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் இந்த தேர்வு வெற்றி பெற்ற நரேஷ், தனிஷ், தர்ஷனா, அமுதினி ஆகிய மாணவர்களுக்கும் அவர் பரிசு வழங்கினார். மேலும் பள்ளி தாளாளர் மீனா இளங்கோவன் இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவின், முதன்மை செயல் அலுவலர் சந்திர பானு, விஜய்ஸ் ஏஸ் அகாடமி தலைவர் கல்யாண் பாபு, விஜய் வித்யாலயா பள்ளி முதல்வர்கள் நாராயண மூர்த்தி, பத்மா, விஜய் மில்லினியம் பள்ளி முதன்மை முதல்வர் துரைராஜ், பள்ளி முதல்வர்கள் ஷீபா, ஜோதி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

Also Read : அரசுப் பணிகளில் மகளிருக்கான 30% இடஒதுக்கீடு முறையை மாற்றுவது சமூக அநீதி: ராமதாஸ் கண்டனம்

இது தொடர்பாக பள்ளி தலைவர் டி.என்.சி. இளங்கோவன் கூறுகையில், எங்களது விஜய்ஸ் ஏஸ் அகாடமி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இங்கு படிக்கும் 350 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.20 வருட அனுபவம் வாய்ந்த வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த சாதனைக்காக பாடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். என்று கூறினார்.

First published:

Tags: Car, Dharmapuri, Gift, NEET Result