முகப்பு /செய்தி /தர்மபுரி / நள்ளிரவில் துணிகர கொள்ளை.. கோயில் உண்டியலை அலேக்காக தூக்கி சென்ற கொள்ளையன்.. சிசிடிவியில் அம்பலமான காட்சி..!

நள்ளிரவில் துணிகர கொள்ளை.. கோயில் உண்டியலை அலேக்காக தூக்கி சென்ற கொள்ளையன்.. சிசிடிவியில் அம்பலமான காட்சி..!

கைது செய்யப்பட்ட கொள்ளையன்

கைது செய்யப்பட்ட கொள்ளையன்

Dharmapuri | சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் மூன்று பேரும் உண்டியலை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri | Dharmapuri | Tamil Nadu

தருமபுரி அடுத்த நல்லம்பள்ளி பகுதியில் நள்ளிரவில் டீக்கடை, பஞ்சாயத்து அலுவலகம், கோவில் பூட்டை உடைத்து, உண்டியல், பணம், டிவி திருடி சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் நள்ளிரவில் ஊராட்சி மன்ற அலுவலகம், டீக்கடை மற்றும் கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதில் அதியமான்கோட்டை காளியம்மன் கோயிலில் இருந்த உண்டியலை அப்படியே எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் நல்லம்பள்ளியில் உள்ள சரவணன் என்பவர் டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 2,500 ரூபாயையும் திருடி சென்றுள்ளனர்.

இதனை அடுத்து நல்லம்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்த 45 இன்ச் எல் இ டிவியையும் திருடி சென்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அதியமான்கோட்டை காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க | ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு.. சினி ஃபால்ஸ், ஐந்தருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

அதில், நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவன், செரபாண்ட ராஜ், கார்த்திக் ஆகிய மூன்று பேரும் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணம் மற்றும் டிவியை பறிமுதல் செய்த போலீசார், ஆற்றில் வீசப்பட்ட உண்டியலையும் மீட்டனர்.

செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி.

First published:

Tags: Dharmapuri, Theft