முகப்பு /செய்தி /தர்மபுரி / பெருமாளை கும்பிட ஊரே திரண்டு திருப்பதிக்கு பயணம் - தருமபுரியில் சுவாரஸ்யம்

பெருமாளை கும்பிட ஊரே திரண்டு திருப்பதிக்கு பயணம் - தருமபுரியில் சுவாரஸ்யம்

திருப்பதி

திருப்பதி

Sirugalur village went to tirupathi | முன்னோர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு கிராம மக்கள் ஒன்றாக இணைந்து திருப்பதிக்கு சென்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரி அருகே முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் 80 வருடங்களுக்கு பிறகு ஊரே ஒன்று திரண்டு திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டம் சோமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிறுகலூர் கிராம மக்கள் 80 வருடங்களுக்கு பிறகு ஊரே ஒன்று திரண்டு பெருமாளை தரிசிக்க திருப்பதிக்கு சென்றுள்ளனர்.இதுகுறித்து பேசிய கிராம மக்கள், தமது முன்னோர்கள் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலை போன்று ஒரு கோவிலை தங்களது கிராமத்தில் கட்ட வேண்டும் என்றும், கோவிலை கட்டி முடித்த பிறகே திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்போம் என வேண்டி கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றிடும் வகையில் ஊரே ஒன்று திரண்டு சொந்த செலவில் பெருமாள் கோவிலை கட்டி முடித்து சமீபத்தில் கும்பாபிசேகமும் செய்து முடித்து விட்ட நிலையில் அந்த சந்தோசத்திலும், முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றிடும் வகையில் 80 வருடங்களுக்கு பிறகு தற்போது ஊரே ஒன்று திரண்டு சுமார் 300 பேர் 5 பேருந்துகளில் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசித்து வர புறப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

பெருமாள் தரிசனம் முடித்த பின்னர் சனிக்கிழமை ஊர் திரும்பவுள்ளதாகவும்,கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் வரை தங்களது வீடுகளையும், கிராமத்தயைும் பெருமாளே பாதுகாத்து துணை நின்று காவல் காத்திடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் கிராம மக்கள்.

செய்தியாளர்: ஆர்.சுகுமார், தருமபுரி.

First published:

Tags: Dharmapuri, Local News, Tirumala Tirupati, Tirupathi, Tirupati Devotees