ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

ஸ்டைலாக முடி வெட்டுவியா? தந்தை திட்டியதால் வீட்டை வீட்டு ஓடிய மகன்! தருமபுரியில் அதிர்ச்சி

ஸ்டைலாக முடி வெட்டுவியா? தந்தை திட்டியதால் வீட்டை வீட்டு ஓடிய மகன்! தருமபுரியில் அதிர்ச்சி

வீட்டில் இருந்து ஓடிய சிறுவன்

வீட்டில் இருந்து ஓடிய சிறுவன்

Dharmapuri school student ran | தருமபுரியில் தந்தை திட்டியதால் மனமுடைந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்து ஓடட்ம் பிடித்தான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dharmapuri | Dharmapuri

பாலக்கோடு அருகே தலைமுடியை மாடலாக வெட்டியதற்கு தந்தை திட்டியதால் கோபத்தில் பள்ளி மாணவர் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மாதப்பன்னின் மகன் நித்திஷ்(15) கோட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார் .அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டிலிருந்த மாணவன் தலைமுடியை ஸ்டைலாக வெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளான். படிப்பில் சரியாக கவனம் செலுத்துவதில்லை ஆனால் தலைமுடியை மட்டும் மாடலாக வெட்டிக் கொண்டு வந்துள்ளாய் என அவரது தந்தை கடுமையாக கண்டித்துள்ளார்.

தந்தையின் கடுமையான சொற்களால் மனமுடைந்த நித்திஷ் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியதால், தந்தை கடந்த ஏழு நாட்களாக உறவினர், நண்பர்கள் என பல்வேறு பகுதிகளில் தேடி வருகிறார்.தேடும் முயற்சியில் பலனளிக்காததால் போலீசாரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Dharmapuri, Local News, School student