Home /News /dharmapuri /

எங்கள் சட்டப்படி கடவுளுக்கு மட்டும் தான் வணக்கம்.. தேசியக் கொடி ஏற்ற மறுத்த ஆசிரியை கூறிய பகீர் விளக்கம்

எங்கள் சட்டப்படி கடவுளுக்கு மட்டும் தான் வணக்கம்.. தேசியக் கொடி ஏற்ற மறுத்த ஆசிரியை கூறிய பகீர் விளக்கம்

தேசியக் கொடி ஏற்ற மறுத்த ஆசிரியை கூறிய பகீர் விளக்கம்

தேசியக் கொடி ஏற்ற மறுத்த ஆசிரியை கூறிய பகீர் விளக்கம்

பேடர அள்ளி உயர்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர் பொதுமக்கள் இன்று தருமபுரி முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பேடர அள்ளி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நேற்று 75வது சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்ற மறுத்தார். இந்த செயலை கண்டித்து ஊர் பொதுமக்கள் சார்பில் முதன்மை கல்வி அலுவலரிடம் நடவடிக்கை எடுக்க கோரி இன்று புகார் மனு ஒன்றை வழங்கினர்.

    இந்த மனுவில் கூறியிருப்பதாவது, “கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் சுமார் 300 மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயில்கிறார்கள். இதில் நேற்று  75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது அந்த பள்ளி தலைமையாசிரியர் தமிழ்செல்வி  என்பவர் தேசிய கொடி ஏற்ற மறுத்துவிட்டார். இதனை ஊர் பொதுமக்கள் கேட்டதற்கு நான் உலகளாவிய ‘யெகோவாவின் சாட்சி’ என்ற அமைப்பில் இருப்பதால் எங்கள் சட்டப்படி வணக்கம் என்பது கடவுளுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்பது கடவுளுடைய சட்டம். பைபிளின் சட்டம்.. நான் கடவுளின் சட்டத்தை மட்டும் முக்கியத்துவம் அளிக்கின்றேன். வணக்கம் கடவுளை மட்டுமே சேர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

    Also Read : ரூ.50 லட்சம் வரை பிச்சை எடுத்து அரசுக்கு வழங்கிய சமூக சேவகர்... மீண்டும் இலங்கை தமிழருக்காக உதவி

    ஆனால் தேசியக்கொடி நான் மதிக்கின்றேன் மரியாதை கொடுக்கின்றேன், ஆனால் நான் அதை அவமதிக்கவில்லை, இது என்னுடைய நிலைப்பாடு, அரசினுடைய அனைத்து சட்டத்திற்கும் நான் கீழ்படிந்து நடப்பேன். ஆனால் வணக்கம் சொல்லுவது மட்டும் கடவுளுக்கு மட்டும்தான் தெரிவிப்பேன் மற்றபடி அனைத்து சட்டங்களையும் கீழ்ப்படிந்து நடந்து கொள்வோம், எனவும் தேசிய கொடியை வணங்கமாட்டேன், என்று கூறிவிட்டார். ஆகவே இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எனவே  அவமதிப்பு செயலை செய்ததலைமையாசிரியர் மீது தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்திடவும், ஊர் பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொதுமக்கள், ஆசிரியர் தேசிய கொடியை அவமதித்து விட்டதாகவும், மத அரசியலை பள்ளிக்குள் கொண்டு வருவதாகவும் கூறினர். இந்த சம்பவம் குறித்து பேசிய ஆசிரியர் தமிழ்செல்வி, “நான் கொடியை மதிக்கிறேன். நிச்சயம் அவமதிக்க மாட்டேன். அரசாங்க சட்டத்திற்கு நாங்கள் அடிபணிவோம். ஆனால் எங்களின் வணக்கம் கடவுளுக்கு மட்டும் தான். என்னை மன்னிக்கவும்.. தேசிய கொடியை அவமதிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கமில்லை. என்னுடைய வணக்கத்தை நான் கடவுளுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். தேசத்தையோ. கொடியையோ நான் நிச்சயம் அவமதிக்கவில்லை” என கூறினார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Dharmapuri, Head Master, Independence day

    அடுத்த செய்தி