முகப்பு /செய்தி /தர்மபுரி / தருமபுரியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற தைப்பூச திருவிழா: ஆயிரக்கணக்கான பெண்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்!

தருமபுரியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற தைப்பூச திருவிழா: ஆயிரக்கணக்கான பெண்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்!

குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

Dharmapuri Womens Thaipusam Festivel | தேர் வீதி உலா வரும்போது, பக்தர்கள் உப்பு, மிளகு, பொறி, முத்துக்கொட்டைகளை தேர் மீது வீசி தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரியில் குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூசத் தேர் திருவிழாவில் இன்று பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்த தேரோட்டத்தில் ஆயிரக்கனக்கான பெண்கள் பங்கேற்றனர்.

தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தைப்பூசத் திருவிழா கடந்த 30-ம் தேதியான்று கொடி ஏற்றத்துடன் துவங்கி 7 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த 7 நாட்களில், ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டது. இதில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வடம் பிடிக்கும் இழுக்கும் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

சிவசுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரினை ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் வீதி உலாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த தேர் வீதி உலா வரும்போது, பக்தர்கள் உப்பு, மிளகு, பொறி, முத்துக்கொட்டைகளை தேர் மீது வீசி தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி வழிப்பட்டனர்.

இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

செய்தியாளர்: ஆர்.சுகுமார்

First published:

Tags: Dharmapuri, Local News