Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

தருமபுரி ஜல்லிக்கட்டுப்போட்டி : பார்வையாளராக வந்த 14 வயது சிறுவன் மாடு முட்டி உயிரிழப்பு

தருமபுரி ஜல்லிக்கட்டுப்போட்டி : பார்வையாளராக வந்த 14 வயது சிறுவன் மாடு முட்டி உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Dharmapuri Jallikattu Boy Death | வாடி வாசலில் இருந்து வெளியே வந்த காளைகளை அழைத்துச் செல்லும் இடத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவனை மாட்டு முட்டியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில் பார்வையாளராக வந்த 14 வயது சிறுவன் மாடு முட்டி உயிரிழந்தார்.

பாலக்கோடு திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கோகுல், அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், தடங்கம் கிராமம் பி.எம்.பி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண தனது மாமா ஹரியுடன் கோகுல்  வந்துள்ளார்.

வாடி வாசலில் இருந்து வெளியே வந்த காளைகளை அழைத்துச் செல்லும் இடத்தில் நின்று, கோகுல் ஜல்லிக்கட்டை பார்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த காளை ஒன்று அவரின் வலது பக்க வயிற்றில் முட்டியது. இதில் படுகாயமடைந்த கோகுல், தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

First published:

Tags: Dharmapuri, Local News