முகப்பு /செய்தி /தர்மபுரி / ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு கூலாக பணம் திருட்டு.. கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..

ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு கூலாக பணம் திருட்டு.. கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..

ஐஸ்க்ரீம் கடையில் திருட்டு

ஐஸ்க்ரீம் கடையில் திருட்டு

Dharmapuri theft | பொம்மிடி பகுதிக்குள் புகுந்த கொள்ளையர்கள் 10க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri | Dharmapuri

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் ஐஸ்க்ரீம் கடை அமைந்துள்ளது. நள்ளிரவில் ஆளில்லா நேரம் பார்த்துக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் இருவர் கல்லாப்பெட்டியில் இருந்த 1,200 ரூபாய் பணத்தை எடுத்தனர். பின்னர் ஜாலியாக ஐஸ் க்ரீம் சாப்பிட்டுவிட்டு கூலாக அங்கிருந்து நடையைக் கட்டினர்.

அங்கிருந்து வெளியேறிய அவர்கள் பொம்மிடி கடைவீதியில் கணினி நிலையம், மளிகைக் கடை, துணிக்கடை, மரப்பட்டறை, பேக்கரி என 10க்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டை உடைத்துப் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

பல கடைகளில் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டதால் அப்பகுதி வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ள நிலையில் போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: ஆர்.சுகுமார், தருமபுரி.

First published:

Tags: Dharmapuri, Local News, Theft