முகப்பு /செய்தி /தர்மபுரி / பூட்டை உடைத்து பாரத மாதாவுக்கு மாலை.. பாஜகவைச் சேர்ந்த 3 பேர் கைது

பூட்டை உடைத்து பாரத மாதாவுக்கு மாலை.. பாஜகவைச் சேர்ந்த 3 பேர் கைது

பூட்டை உடைத்து பாரத மாதா சிலைக்கு மாலை

பூட்டை உடைத்து பாரத மாதா சிலைக்கு மாலை

பாரத மாதா கோவிலின் பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

தருமபுரில் மாவட்டம், பாப்பாரப்பட்டி பாரதமாதா கோவிலில் பூட்டை உடைத்து  பாரதமாதாவுக்கு மாலை அணிவித்த பாஜக வினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம்,பாப்பாரப்பட்டியில்  கடந்த 11ம தேதி  நடந்த 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா பாதயாத்திரையை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம்  துவங்கி வைத்து பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை ஊர்வலமாக சென்றனர். இதை தொடர்ந்து  தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா ஆலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர்.

அப்போது,  பாரதமாதா நினைவாலயத்தில் இருந்த கதவுகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில் அங்கு பணியாற்றும் நினைவிட கண்காணிப்பாளரிடம் கதவை திறக்கும் படி வலியுறுத்தினர். கண்காணிப்பாளர் மறுத்ததால்  ‘எங்களுக்கே அனுமதியில்லையா’ என பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. பி. ராமலிங்கம், பாரதமாதா நினைவாலயத்தில் உள்ள கதவை பூட்டப்பட்டிருந்த பூட்டை கல்லால் உடைத்தனர்.

இதையும் படிங்க: செருப்பு வீச்சு சம்பவம்: 'திமுக அனுப்பிய அம்பு, எய்தவரிடமே திரும்பி வரும் படலம்' - நடிகை கஸ்தூரி ட்வீட்

பின்னர், பாரதமாதா திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.  இது குறித்து தகவல் அறிந்து வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர்  இமயவர்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பாரதமாதா நினைவாலய வாயில் கதவின் பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக முன்னாள் எம்.பி., ராமலிங்கம், தருமபுரி முன்னாள் எம்.எல்.ஏ.வும் தருமபுரி மாவட்ட பாஜக தலைவருமான பாஸ்கர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில்பாஜக ஒன்றிய தலைவர் சிவலிங்கம் நிர்வாகிகள் ஆறுமுகம்,மணி, உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

First published:

Tags: Arrest, BJP, Dharmapuri