முகப்பு /செய்தி /தர்மபுரி / மின் வேலியில் சிக்கி பலியான 3 பெண் யானைகள்.. தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை

மின் வேலியில் சிக்கி பலியான 3 பெண் யானைகள்.. தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை

உயிரிழந்த யானைகள்

உயிரிழந்த யானைகள்

Dharmapuri Elephant | தருமபுரியில் வன விலங்குகள் விவசாய பயிர்களை தாக்காமல் இருப்பதற்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 பெண் யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

பாலகோடு அருகே மின் வேலியில் சிக்கி மூன்று பெண் யானைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஹள்ளி அருகே உள்ள அத்திமுட்லு - சங்கராபுரம் அடுத்த காளிகவுண்டர் கொட்டாய் பகுதியை சேர்ந்த சக்தி பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 22 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பு உள்ளிட்ட விவசாய நிலத்தை முருகேசன் (45) என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் வனப்பகுதியையொட்டி உள்ளதால் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாய நிலத்தை  சுற்றி மின் கம்பி அமைத்து மின் வேலி விட்டிருந்தார். இதனையடுத்து அப்பகுதியில் நேற்று இரவு மூன்று பெண் யானைகள், 2 குட்டி யானைகள் இந்த விவசாய நிலத்திற்குள் உணவுக்காக நுழைந்த போது இரவு 10:15 மணியளவில் மின்சாரம் தாக்கி மூன்று பெண் யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இரண்டு குட்டி யானைகள், தாய் யாணைகள் இறந்ததை அறிந்து அங்கும் இங்கும் சுற்றி சுற்றி வருகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பாலகோடு வனத்துறை அதிகாரிகள் முருகேசனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று யாணைகள் இறப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தண்ணீர் தேடியும், உணவுக்காகவும் யாணைகள் வனத்தை விட்டு வெளியே வருவதும்,செல்வதுமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாரண்டஹள்ளி அருகே  உயிரிழந்த மூன்று யானைகளை உடற்கூறு ஆய்வு செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர்: ஆர்.சுகுமார், தருமபுரி.

First published:

Tags: Dharmapuri, Elephant, Local News