முகப்பு /செய்தி /தர்மபுரி / கேடிஎம் பைக்கில் புகுந்த விஷ பாம்பு.. அலறியடித்து ஓடிய மக்கள்!

கேடிஎம் பைக்கில் புகுந்த விஷ பாம்பு.. அலறியடித்து ஓடிய மக்கள்!

பைக்குக்குள் புகுந்த பாம்பு

பைக்குக்குள் புகுந்த பாம்பு

Dharmapuri Snake | இருசக்கர வாகனத்தை வட்டார வளர்ச்சி அலுவலக வாசலில் நிறுத்தி விட்டு சென்ற போது பாம்பு என்ஜினுக்குள் புகுந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரி அருகே கேடிஎம் பைக்குக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் போராடி லாவகமாக மீட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் குப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த  இளைஞர் அரவிந்த் (21) என்பவர் தனது கேடிஎம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

மீண்டும் இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றபோது, 2 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் என்ற விஷ பாம்பு பைக்கின் என்ஜினுக்குள் நுழைவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் பைக்கை பார்ட் பார்ட்டாக கழற்றி பாம்பை லாவகமாக மீட்டனர்.

இதனையடுத்து அந்த வாலிபர் பைக்கை நிம்மதியுடன் எடுத்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

செய்தியாளர்: ஆர்.சுகுமார், தருமபுரி.

First published:

Tags: Dharmapuri, Local News, Snake