ஹோம் /நியூஸ் /Dharmapuri /

காவிரி ஆற்றில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம்... விரைந்து பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

காவிரி ஆற்றில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம்... விரைந்து பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்

Dharmapuri : தருமபுரி மாவட்ட எல்லையான நாகமரை பகுதியில் இருந்து பண்ணவாடிக்கு சுமார் 5 கி.மீ தொலைவுக்கு காவிரி ஆற்றில் பரிசல் மற்றும் படகுப் போக்குவரத்து செயல்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தருமபுரி மாவட்டம் நாகமரையில் கடல் போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள், தமிழக அரசு அறிவித்துள்ளது போல் விரைந்து உயர்மட்ட பாலம் அமைத்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  தருமபுரி மாவட்ட எல்லையான நாகமரை பகுதியில் இருந்து பண்ணவாடிக்கு சுமார் 5 கி.மீ தொலைவுக்கு பரிசல், படகுப் போக்குவரத்து செயல்படுகிறது. தண்ணீரில்லாத வறட்சியான காலங்களில் இந்தப் பயணம் வெறும் 50 அடி தொலைவுக்கான, 5 நிமிட பயணமாக மட்டுமே இருந்தது.

  தற்போது, வெப்பச் சலனம் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக வரும் தண்ணீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டினால், நாகைமரையில் தண்ணீர் தேங்கும். தற்பொழுது மேட்டூர் அணையில் 115 அடி தண்ணீர் உள்ளது.

  எனவே, அங்கே கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால் நாகமரை குடியிருப்பு வரை தண்ணீர் நிரம்பி நீர்த்தேக்கப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி தருகிறது. தண்ணீர் அதிகமாக இருப்பதால், மீன்பிடித் தொழிலில் இப்பகுதி மக்கள் தீவிரம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். மேலும் நாகமரை-பண்ணவாடிக்கு பரிசல் பயணம் சுமார் 5 கி.மீ செல்ல வேண்டியுள்ளது.

  தண்ணீர் வேகமாக வருவதால் நடுப்பகுதிக்குச் செல்லாமல், ஓரமாகவே பரிசலை இயக்குகின்றனர். தண்ணீர் அதிகமாக வருவதாலும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும், மாலை நேரங்களில் பரிசல் இறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாகமரைக்கும் பண்ணவாடிக்குமான பரிசல் இயக்கம் குறைந்தளவிவேலேயே இருந்து வருகிறது.

  நாகமரையிலிருந்து பண்ணவாடிக்கு தற்போது விசைப் படகுப் போக்குவரத்து பகலில் மட்டும் நடைபெறுகிறது. மேட்டூர் பகுதியிலிருந்து தருமபுரி மாவட்ட எல்லைப் பகுதிக்கு வந்து பணியாற்றுவோரும், நாகமரை உள்ளிட்ட குக் கிராமங்களில் இருந்து மேட்டூர் உள்ளிட்ட சேலம் மாவட்ட எல்லைப் பகுதிக்குச் சென்று பணியாற்றுவோரும் இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

  படகு பயணம்

  தண்ணீர் அதிகரித்துள்ளதால், இப் போக்குவரத்தும் கொஞ்சம் அபாயகரமானதே என்பதை படகு மற்றும் பரிசல் ஓட்டிகள் ஒத்துக்கொள்கின்றனர். மேலும், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த நாகமரை, நெருப்பூர், ஏரியூர் பகுதிகளிலிருந்து நூற்றுக் கணக்காணோர் சேலம் மாவட்டம் பண்ணவாடி பரிசல் துறைக்கு சென்று அங்கிருந்து மேட்டூர், பவானி, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர். பலர் இரு சக்கர வாகனங்களுடன் பரிசலில் பயணம் மேற்கொள்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவ்வாறு, தண்ணீர் அதிகம் உள்ள காலங்களில் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், தண்ணீர் குறைவான காலங்களில் இப்பகுதியில் பாலம் ஒன்றை அரசு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஒட்டனூர் முதல் ஏமனூர் வரை உயர்மட்ட பாலம் கட்ட நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், அந்த பகுதியை ஆய்வு செய்தார்.

  Must Read : மாணவர்களுக்கு தலைமுடி சீராக வெட்டும் விவகாரம்... வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்புக்கு முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு

  இந்நிலையில், தற்பொழுது நீர் வரத்து அதிகமாக உள்ளது.  இனிவரும் இரண்டு மாதங்களில் பருவமழை தொடங்க இருப்பதால் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும். எனவே இந்த பரிசல் பயணம் மிகவும் ஆபத்தாக இருக்கும் என்றும், உடனடியாக தமிழக அரசு அறிவித்துள்ள உயர்மட்ட பாலத்தை விரைந்து கட்டி கொடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர் - ஆர்.சுகுமார், தருமபுரி.

  Published by:Suresh V
  First published:

  Tags: Cauvery River, Dharmapuri