ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

அதிமுக ஆட்சியில் துணைவேந்தர் பதவி விற்பனையா? பன்வாரிலால் புரோகித் பேச்சுக்கு கே.பி.அன்பழகன் மறுப்பு

அதிமுக ஆட்சியில் துணைவேந்தர் பதவி விற்பனையா? பன்வாரிலால் புரோகித் பேச்சுக்கு கே.பி.அன்பழகன் மறுப்பு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

K.P.Anbazhagan Press Meet | இந்த நியமனத்தில் முதல்வருக்கோ அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. முழுக்க முழுக்க ஆளுநரையைச் சார்ந்தது. ஒருவேளை அவ்வாறு பணம் கை மாறி இருந்தால் அது ஆளுநரையை சாரும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Dharmapuri, India

  தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40 கோடி முதல் 50 கோடி வரை விற்கப்படுகிறது என்று பன்வாரிலால் புரோகித் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் துணை வேந்தர்களை நியமிக்கின்ற வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை என்பதால் தமிழகத்தின் மீது குறை கூறுவதாக தர்மபுரியில் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டியளித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது, துணை வேந்தர் நியமனத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வாங்குகிறார்கள் என  இதேப்போன்று ஒரு விழாவில், பேசினார். நான் அப்பொழுதே இவரது கருத்துக்கு, மறுப்பு தெரிவித்து, விளக்கம்  கொடுத்துள்ளேன். ஒரு துணை வேந்தரை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானவுடன், தேடுதல் குழு அமைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

  மேலும் “அந்த குழு 10 பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்புகிறது. இந்த 10 பேரில் மூன்று பேரை தேர்வு செய்து அந்த மூன்று பேரிடமும் ஆளுநர் நேர்காணல் நடத்துகிறார். இந்த நேர்காணலில் அரசுக்கு அரசு சார்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு உயர் கல்வித் துறைக்கு எந்த தொடர்பும் இல்லை. இதில் அரசுக்கோ, முதல்வர் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சருக்கு தொடர்பு இல்லை” என்றும் குறிப்பிட்டார்.

  இதையும் படிங்க : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனையான ஆடுகள்..

  தொடர்ந்து, “தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு 40 கோடி முதல் 50 கோடி வரை விற்கப்படுகிறது என்று பன்வாரிலால் புரோகித் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் துணை வேந்தர்களை நியமிக்கின்ற வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை என்பதால் தமிழகத்தின் மீது குறை கூறுவது ஏற்புடையதல்ல. துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது அதில் எந்தவித தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு ஆளுநரே. இதில் ஆளுகின்ற அரசுக்கோ முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை” என்று கூறினார்.

  இதையும் படிங்க: ஆளுநர் ரவிக்கு எதிரான சிறு பொறிகள் பெருந்தீயாக மாறாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை- திமுகவின் முரசொலி எச்சரிக்கை

  பின்னர் “ ஒருவேளை அவ்வாறு பணம் கை மாறி இருந்தால் அது ஆளுநரையை சாரும். மேலும் 22 துணை வேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்தேன் என்று அவர் சொல்கிறார். இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அரசு தலையிட்டு பட்டியல் கொடுத்து இருந்தால் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். அவர் கூறுவது தவறான தகவல் தான்” என திட்டவட்டமாக கூறினார்.

  செய்தியாளர் : ஆர்.சுகுமார் - தர்மபுரி

  Published by:Karthi K
  First published:

  Tags: Anbalagan, Dharmapuri, Former Minister