முகப்பு /செய்தி /தர்மபுரி / மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட தருமபுரி மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் இடமாற்றம்..

மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட தருமபுரி மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் இடமாற்றம்..

டாக்டர் சதீஷ்

டாக்டர் சதீஷ்

Dharmapuri | தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், மாணவிகளிடம் தவறாக நடந்த உதவி பேராசிரியரை வேறு பாடப்பிரிவு துறைக்கு இடமாற்றம் செய்து டீன் அமுதவல்லி நடவடிக்கை எடுத்துள்ளார்.

  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சட்டம் சார்ந்த மருத்துவ பிரிவில் உதவி பேராசிரியராக சதீஷ்குமார் என்பவர் பணியேற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மருத்துவ மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் இதனை எந்த மாணவிகளும் முறையாக அலுவலகத்திற்கு புகார் கொடுக்கவில்லை.

இந்நிலையில் உதவி பேராசிரியர் சதீஷ்குமார்  மாணவிகளிடையே அநாகரீகமாக நடந்துக் கொள்வது தெரிந்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பில் பயின்று வரும் மாணவி ஒருவரை உரசுவதும் தலையில் கைவைத்து தடவுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் தனது அறைக்கு மாணவியை வரவழைத்து பாட்டு பாடச் சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, சக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மாணவர்கள் ஒன்றிணைந்து கல்லூரி முதல்வருக்கு எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரினை பெற்றுக் கொண்ட மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி  புகாருக்குள்ளான உதவி பேராசிரியர் சதீஷ்குமாரை, தற்காலிகமாக சட்டம் சார்ந்த மருத்துவ பிரிவிலிருந்து, குழந்தைகள் பிரிவிற்கு இடமாற்றம் செய்துள்ளார். மேலும் இந்த புகார் குறித்து மருத்துவ மாணவிகள் மற்றும் சதீஷ்குமாரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see... அன்னவாசல் அருகே பாம்பை விரட்டும்போது வெடி பொருட்கள் வெடித்தது... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம்

இந்நிலையில் விசாரணை முடிந்த பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு மருத்துவக் கல்வி இயக்கத்திற்கு பரிந்துரை செய்வதாக மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி தெரிவித்தார். மேலும் தற்பொழுது புகாருக்குள்ளான உதவி பேராசிரியர் சதீஷ்குமார் கடந்த காலங்களில் ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு புகார்களுக்கு சிக்கியுள்ளார். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் மருத்துவ கல்லூரி நிர்வாகிகளே பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

top videos

    செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி

    First published:

    Tags: Dharmapuri, Medical College, Sexual harassment