Home /News /dharmapuri /

தருமபுரியில் அரசால் தடை செய்யப்பட்ட 5 டன்  ஆப்பிரிகன் கெளுத்தி மீன் அழிப்பு...

தருமபுரியில் அரசால் தடை செய்யப்பட்ட 5 டன்  ஆப்பிரிகன் கெளுத்தி மீன் அழிப்பு...

African catfish

African catfish

Dharmapuri | தருமபுரி மாவட்டத்தில் அதிகப்படியாக வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகாரிகள் அழித்தனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dharmapuri, India
    மத்திய மற்றும் மாநில அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பரிக்கன் கெளுத்தி மீனை உண்ணுவதால் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாகவும், இந்த மீன்கள் உள்ளூர் மீன்களை அழித்துவிடுவதால், ஆப்பரிகன் கெளுத்தி மீன்களை வளர்க்க கூடாது என மீன் வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும். தருமபுரி மாவட்டத்தில் 32 இடங்களில்  குட்டை அமைத்து அதில் வளர்க்கப்படுகிறது.

    இங்கு வளர்க்கப்படும் ஆப்பிரிகன் கெளுத்தி மீன் மதுபான பார்களுக்கும், கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் விற்பனை செய்ய அனுப்புகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் ஆப்பரிக்கன் மீன் வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    அதன் அடிப்படையில்  இன்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுலரமனன். தருமபுரி அருகே உள்ள மதிகோண்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு 3  குட்டைகளில் ஆப்பரிகன் கெளுத்தி மீன்கள் வளர்கப்பட்டு வந்தது தெரியவந்தது. அதில் கோழி கழிவுகளிலும், கழிவுநீரிலும் வளர்ந்து துர்நாற்றம் வீசதியது.

    Also see... குழந்தைகளை பாதிக்கும் காய்ச்சல் சென்னையில் அதிகமாக பரவுகிறது...

    இதனையடுத்து 3 குட்டைகளிலும் தண்ணீரை வெளியேற்றி பொக்லைன் இயந்திரம் மூலம்  குட்டையில் உள்ள  5 டன் மீன்கள் மீது மண் போட்டு மூடி அழித்தனர். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஆப்பரிகன் கெளுத்தி மீன் குட்டைகளை தொடர்ந்து அழித்து வரும் பணியில் ஈடுப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dharmapuri, Fish

    அடுத்த செய்தி