ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது...

கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது...

கர்நாடக வனப்பகுதியில் 3 பேர் கைது

கர்நாடக வனப்பகுதியில் 3 பேர் கைது

Dharmapuri | கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் உட்பட  மூன்று பேரை கர்நாடக வனத்துறையினரால் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Dharmapuri, India

  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல்  ஏரிக்காடு பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து (27)என்பவர் நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன்களை வைத்து, தமிழ்நாடு கர்நாடகா வன எல்லை பகுதிகளான ஒகேனக்கல் மற்றும் ஆலம்பாடி, செங்கப்பாடி பகுதிகளில் தனது நண்பர்களான நல்லாம்பட்டியை சேர்ந்த  கவின்குமார் (27)  மற்றும் விக்னேஷ் (25)ஆகியோருடன் கர்நாடக மாநிலம்  கோபிநத்தம் வனச்சரக பகுதிகளுக்குள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். இதில் கவின்குமார் என்பவர் மருத்துவ படிப்பை இந்த ஆண்டு முடித்துள்ளார்.

  வனத்துறையினர் விலங்குகளை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமராவில் இவர்கள் சுற்றித்திரிவது புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை வைத்து  கர்நாடக மாநிலம் கோபிநத்தம் வனச்சரக அலுவலர்கள் ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த பச்சையண்ணன் மகன் மாரிமுத்துவை  கைது செய்து விசாரணை நடத்தினர்.

  Also see... உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு

  அதில் அவர் மறைத்து வைத்திருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஒரு ஏர்கன் ஆகியவைகளை பறிமுதல் செய்தும் அவருடன் வேட்டையாட சென்ற  கவின்குமார் மருத்துவ  மாணவர் மற்றும் விக்னேஷ் ஆகியோரை   கர்நாடக மாநில வனத்துறையினர் கைது செய்து கொள்ளேகால் வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தருமபுரி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Forest Department, Gun, Karnataka