ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து 1 டன் குட்கா கடத்தல் - மடக்கிப்பிடித்த போலீசார்

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து 1 டன் குட்கா கடத்தல் - மடக்கிப்பிடித்த போலீசார்

குட்கா கடத்தல்

குட்கா கடத்தல்

Dharmapuri district News : மினி கண்டைனர் லாரியில் ரகசிய அறை அமைத்து சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 1 டன் குட்கா பொருட்களை தர்மபுரி பகுதியில் கடத்தி வந்த 2 பேரை தொப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dharmapuri, India

பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் சேலத்தை நோக்கி கடத்திச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள பாளையம் சுங்க சாவடி பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தன.

அப்போது அந்த வழியாக வந்த மினி ஈச்சர் கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சரக்கு எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் லாரியில் உள்ளே ஏறி சோதனை செய்தனர்.

அப்போது, அந்த லாரியில் ரகசிய அறை இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை உடைத்து உள்ளே பார்த்தபோது, அதிர்ச்சி அயடைந்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்

கடத்தி வரப்பட்ட குட்கா சுமார் 1  டன் எடை கொண்டதாகவும் இதன் மதிப்பு ரூ.20 லட்சத்திற்கும் மேல் இருக்கும் எனவும் தெரிகிறது. இதனால் அந்த லாரியை ஓட்டி வந்த வேலூர் பகுதியைச் சேர்ந்த சாதிக் பாஷா (30) மாற்று டிரைவர் பயாஸ் அகமது (32) ஆகியோரை பிடித்து தொப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Must Read : ஆசிரியரின் பணியிட மாற்றம்.. கண்ணீர்மல்க மாணவர்கள் நடத்திய பாசப் போராட்டத்துக்கு கிடைத்தது பலன்..

ரகசிய அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் ஈச்சர் வாகனத்தை பறிமுதல் செய்த தொப்பூர் போலீசார்,  இந்த கடத்தல் சம்பவத்திற்கு வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் - ஆர்.சுகுமாா்.

First published:

Tags: Dharmapuri, Gutka Pan masala Seized, Smuggling