ஹோம் /நியூஸ் /கடலூர் /

ஆசைவார்த்தை கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - தனியார் நிதி நிறுவன ஊழியர் போக்சோவில் கைது

ஆசைவார்த்தை கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - தனியார் நிதி நிறுவன ஊழியர் போக்சோவில் கைது

2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்

2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்

Cuddalore : பண்ருட்டியில் காதல் வலையில் வீழ்த்தி இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் இளைஞர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Panruti, India

  கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல் காங்கிருப்பு  பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் ஜெயபால் (23). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு முத்தாண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளார்.இதில் அந்த சிறுமி கர்ப்பம் ஆனதால் விஷயம் பெற்றோருக்கு தெரியவந்தது.

  இதுகுறித்து சிறுமியின் தந்தை கருணாகரன் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் ஜெயபாலுவை தேடி வந்த நிலையில், முத்தாண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரையும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

  Also see... ஜவ்வாது மலை புத்தூர் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்ற இளைஞர் மரணம்

  இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து வாலிபர் ஜெயபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அடுத்தடுத்து இரண்டு சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட  சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: பிரேம் ஆனந்த், கடலூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Cuddalore, Love, Panruti Constituency, Pregnancy, Sexual abuse