முகப்பு /செய்தி /கடலூர் / டிடிஎஃப் வாசனை பார்க்க குவிந்த இளைஞர்கள்... பைக் பறிமுதல், போலீசார் தடியடி... கடலூரில் பரபரப்பு

டிடிஎஃப் வாசனை பார்க்க குவிந்த இளைஞர்கள்... பைக் பறிமுதல், போலீசார் தடியடி... கடலூரில் பரபரப்பு

டிடிஎப் வாசனை பார்க்க குவிந்த இளைஞர்கள்

டிடிஎப் வாசனை பார்க்க குவிந்த இளைஞர்கள்

TTF Vasan | கடலூரில் யூட்யூபர் டிடிஎஃப் வாசனை காண குவிந்த இளைஞர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

யூடியூபர் டிடிஎஃப் வாசன் (Youtuber TTF Vasan) பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அவருக்கு என்று ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் வாசன். இந்த நிலையில் இன்று கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வாசன் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக நேற்று பல இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டது. போலீசார் அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்டதாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் பேனர்களும் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் இன்று பிற்பகல் புதுப்பாளையம் பகுதியில் டிடிஎஃப் வாசன் (Youtuber TTF Vasan) ஆதரவாளர்கள் குவிந்து வந்தனர். இந்த நிலையில் காரில் வரும் டிடிஎஃப் வாசனை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் குவிந்தத்துடன் இரண்டு சக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் செய்தனர். இதனால் புதுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் உடன் வந்தவர்களை வாகனங்களை எடுத்து சென்று அப்புறப்படுத்துமாறு பலமுறை கேட்டுக்கொண்டனர், ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. போலீசார் உடனே வந்தவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதியில் ஏராளமானார் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடினர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இயக்கிய பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Also Read : கரைவேட்டிக்கு மத்தியில் கேஷுவல் டிரஸ், ஜீன்ஸ் பேண்டுடன் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்!

இதன்பின டிடிஎஃப் வாசன் (Youtuber TTF Vasan) அங்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்டபோது அவரை வழியனுப்புவதற்கு மீண்டும் இரண்டு சக்கர வாகனங்களில் அதிக அளவில் ஒலி எழுப்பியவாறு அவரது ஆதரவாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அண்ணா மேம்பாலம் அருகே வரும்பொழுது சாலையில் சென்றவர்கள் மீது இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பிடித்தனர்.  டிடிஎஃப் (Youtuber TTF Vasan) ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்து அவற்றை வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  மேலும் உடன் வந்து வாகனங்கள் அனைத்தையும் செல்போன் மூலம் படம் எடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதனிடையே டிடிஎஃப் வாசன் (Youtuber TTF Vasan) கூறுகையில், போலீஸர் யாரையும் தாக்கவில்லை. போலீசார் பயமுறுத்துவதற்காக தரையில் தடியை அடித்தார்கள். பல இடங்களில் போலீசார் அன்புடன் நடந்து கொள்வதாகவும் பல இடங்களிலும் செல்லும் பொழுது அக்காக்கள், தங்கைகள், தம்பிகள், அண்ணன்கள் என பலர் உள்ளதால் பல்வேறு சிக்கலில் சிக்கி கொள்கிறேன்.

ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுவதற்கு இளைஞர்கள் ஆசைப்படுவது எதற்கு என்றால் நாங்கள் தான் ஓட்டுகிறோம் என்பதை தெரிவிப்பதற்காக இளைஞர்கள் அப்படி செல்வதாகவும் நானும் ஆரம்ப காலத்தில் ஹெல்மெட் போடாமல் தான் சென்றேன். ஒருமுறை கீழே விழுந்து அடிபட்ட பிறகு தற்போது ஹெல்மெட் அணியாமல் செல்வதில்லை .

அதனால் அனைவரும் ஹெல்மெட் இல்லாமல் செல்லக்கூடாது அப்படி என்றால் முகமே இல்லாமல் போய்விடும் என தெரிவித்தார். இங்கு கூட காவல்துறையினர் இரண்டு சக்கர வாகனத்தில் வர வேண்டாம் எங்களால் கட்டுப்படுத்த முடியாது நான்கு சக்கரத்தில் வாகனத்தில் வாருங்கள் என கூறியதின் அடிப்படையில் இன்று தான் காரில் வந்ததாக அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Cuddalore, TTF Vasan