ஹோம் /நியூஸ் /கடலூர் /

கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு.. நடராஜர் கோயிலில் பெண் பக்தர் வாக்குவாதம்!

கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு.. நடராஜர் கோயிலில் பெண் பக்தர் வாக்குவாதம்!

வாக்குவாதத்தில் ஈடுபடும் தீட்சிதர்

வாக்குவாதத்தில் ஈடுபடும் தீட்சிதர்

ஜெயஷீலா என்பவர் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முயன்றபோது, அவரை கோயில் தீட்சிதர்கள் தடுத்துள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chidambaram, India

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த தீட்சிதர்களுடன் பெண் பக்தர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதியளித்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பல நேரங்களில் தீட்சிதர்கள் அனுமதி வழங்குவதில்லை என புகார் எழுந்தவண்ணம் இருக்கிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு வந்த ஜெயஷீலா என்பவர் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முயன்றபோது, அவரை கோயில் தீட்சிதர்கள் தடுத்துள்ளனர். இதையடுத்து, தீட்சிதர்களுடன் ஜெயஷீலா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் பெண் அளித்த புகாரின் பேரில் கோயிலுக்கு வந்த காவல்துறையினர் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, மீண்டும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதி வழங்கினர்.

First published:

Tags: Chidambaram, Hindu Temple, Women