Home /News /cuddalore /

வங்கி அதிகாரிகளின் தரக்குறைவான பேச்சு.. அவமானத்தால் பெண் தற்கொலை - கடலூரில் பரபரப்பு

வங்கி அதிகாரிகளின் தரக்குறைவான பேச்சு.. அவமானத்தால் பெண் தற்கொலை - கடலூரில் பரபரப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Cuddalore district News : 2 மாதம் இ.எம்.ஐ. கட்ட முடியாத பெண்ணை வங்கி ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Cuddalore, India
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அனுபவம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி-செல்வராஜ் தம்பதியினர். அதே பகுதியில் டீக்கடை மற்றும் சிறிய டிபன் கடையையும் நடத்தி வருகின்றனர். இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக கடலூரில் உள்ள எக்விடாஸ் எனப்படும் தனியார் வங்கியில் 2 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டினர்.

பாதி கடன் கட்டி முடித்திருந்த நிலையில் அதனை டாப் அப் செய்யலாம் என வங்கி ஊழியர்கள் தினமும் போன் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் டாப் அப் செய்ய தம்பதி ஒப்புக்கொள்ளவே மேலும் 6 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளனர். இதனால் மாதந்தோறும் கட்ட வேண்டிய இஎம்ஐ தொகை அதிகரித்துள்ளது. ஆனாலும் கஷ்டப்பட்டு தொகையை தம்பதி கட்டி வந்துள்ளனர்.

இவர்களின் மகள் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிலையில், அதிக செலவு ஏற்படவே கடந்த இரண்டு மாதம் மட்டும் இஎம்ஐ கட்டவில்லை. இஎம்ஐ கட்டாததை தொடர்ந்து வங்கி அதிகாரிகள் பலமுறை ஜெயந்தியிடம் கேட்டுள்ளனர்.

அவர், செய்வதறியாமல் தவித்த நிலையில் கடந்த சில நாட்களாக வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து ஜெயந்தியை தரக்குறைவாக பேசி உள்ளனர். கடந்த 5-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வந்த வங்கி ஊழியர்கள் சிலர் இரவு 8 மணி வரை வீட்டிற்குள்ளேயே அமர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தி உள்ளனர்.

மேலும் ஜெயந்தியின் மகளிடமும் தாய்யை பற்றி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த ஜெயந்தி நள்ளிரவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஜெயந்தியின் கணவர் புகார் அளித்தும் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

புகார் மனு


இந்நிலையில், இதே வங்கியில் கடன் வாங்கிய ஒரு நபரை கடந்த வாரம் வங்கி மேலாளர் தரகுறைவாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், கடலூர் மஞ்ச குப்பத்தை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரை போனில் தொடர்பு கொண்டு பேசிய வங்கி மேலாளர், “உடல்நிலை சரியில்லை என்றால் என்ன, இதயத்தில் உனக்கு பெரிய ஓட்டையா, பிச்சை எடுத்தாவது பணத்தைக் கட்டு” என்று கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருபக்கம் தமிழகம் முழுவதும் லோன் ஆப் மூலம் பல மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தனியார் வங்கி ஊழியர்கள் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு கந்துவட்டி போல் வசூல் வேட்டையில் ஈடுபடுவதோடு, பணத்தை கட்ட தவறினால் பெண்களுக்கு மன உலைச்சல் ஏற்படுத்தி தகாத வார்ததைக்களால் பேசி அவமானம் படுத்தி தற்கொலைக்கு தூண்டும் நிகழ்வு அரங்கேறி வருகிறது.

Must Read : மோசடி வழக்கு... விஷம் குடித்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

எனவே, தமிழக காவல் துறையில் கந்துவட்டிக்கு எப்படி அதிரடி நடவடிக்கை எடுக்கிறார்களோ அதே போல் தனியார் வங்கிகள் வட்டி நபர்கள்போல் நடந்துகொண்டால் அவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Suresh V
First published:

Tags: Bank Loan, Crime News, Cuddalore, EMI, Suicide

அடுத்த செய்தி