Home /News /cuddalore /

கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி கிராம மக்கள், விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டம்!

கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி கிராம மக்கள், விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டம்!

பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டம்!

பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டம்!

கொள்ளிடம் ஆற்றின் கரைகளை பலப்படுத்தி தடுப்பணை கட்டகோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொள்ளிடம் ஆற்றில் தடுப்புச்சுவர் தடுப்பணை கட்ட வேண்டும், கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், மேட்டூரில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும், கொள்ளிடம் ஆற்றின் கறைகளை பலப்படுத்தி கரையோர மக்களை காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடந்தது.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் கவரப்பட்டு, காரமேடு, வீரன்கோயில்திட்டு, கீழப்பெரம்பை மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர்.

பின்னர் கொள்ளிடம் ஆற்றில் தடுப்புச் சுவர் கட்டகோரியும், கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் வராத சூழ்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலில் வீணாக தண்ணீர் கலப்பதை கண்டித்தும். மேட்டூர் அணையில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை  கட்டகோரியும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து. பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்,  பெருமழையால் கிடைத்த தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் 28 மாவட்டங்களின் வடிகாலாக இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடுகிறார்கள். 15 தினங்களுக்கு முன்பு வடக்கு ராஜன் வாய்க்காலில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் திறக்கவில்லை. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்ததாக முதல்வர் கூறினார். ஆனால் இந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.



ஆனால் இன்று கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்று வீணாக கடலில் கலக்கிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரைகள் உடைகிறது. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பொதுப்பணித்துறை கொள்ளை அடிக்கும் துறையாக மாறி விட்டது. வடக்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறக்க கேட்டபோது மராமத்து பணி நடக்கிறது. அதனால் தண்ணீர் திறக்க முடியாது என கூறினார்கள்.

இதனால் சிதம்பரம், சீர்காழி தாலுகாக்களில் பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டது. பல லட்சம் கன அடி தண்ணீர் திறக்கும் போது அதன் கரைகள் தாங்குமா என அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை எனவே வல்லம்படுகை கிராமத்திலிருந்து பழையார் வரை கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்வதால் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான குடிநீரும் வரவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்க வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வரை இந்த அலுவலகத்தை விட்டு செல்ல போவதில்லை என தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Cuddalore

அடுத்த செய்தி