ஹோம் /நியூஸ் /கடலூர் /

கட்சிக்கொடி ஏற்றுவதில் தகராறு.. ஒரே நேரத்தில் போராட்டம் செய்த விசிக-பாமக.. கடலூரில் பரபரப்பு!

கட்சிக்கொடி ஏற்றுவதில் தகராறு.. ஒரே நேரத்தில் போராட்டம் செய்த விசிக-பாமக.. கடலூரில் பரபரப்பு!

விசிக - பாமக சாலைமறியல்

விசிக - பாமக சாலைமறியல்

ஒரே இடத்தில் இரு தரப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் விரட்டியடித்தனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Cuddalore | Cuddalore

கடலூர் அருகே கட்சிக்கொடி ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக விசிக மற்றும் பாமக-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூரை அடுத்த சுப்பிரமணியபுரம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக் கம்பம் நட்டு கட்சிக் கொடியினை ஏற்றுவதற்கு திட்டமிட்டு இருந்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடலூர் விருத்தாச்சலம் சாலையில் பாமக-வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், கொடிக்கம்பத்தை அகற்றாவிட்டால் மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கொடிக்கம்பத்தை அகற்றுமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கொடிக்கம்பத்தை அகற்ற முடியாது என்று கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடலூர்-விருத்தாச்சலம் சாலையில் மறியலில் ஈடுபடட்னர்.

ஒரே இடத்தில் பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால், இரு தரப்பினரையும் போலீசார் விரட்டியடித்தனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

செய்தியாளர்: பிரேமானந்த், கடலூர்.

First published:

Tags: Local News, PMK, Protest, VCK