ஹோம் /நியூஸ் /கடலூர் /

சிங்காரவேலர் சிலைக்கு சந்தன பொட்டு வைத்த பாஜகவினர்... கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு.!

சிங்காரவேலர் சிலைக்கு சந்தன பொட்டு வைத்த பாஜகவினர்... கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு.!

சிங்காரவேலர் சிலைக்கு சந்தன பொட்டு வைத்த பாஜகவினர்

சிங்காரவேலர் சிலைக்கு சந்தன பொட்டு வைத்த பாஜகவினர்

கடலூரில் சிங்காரவேலர் சிலைக்கு பாஜகவினர் சந்தனம் வைத்து பொட்டு வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Cuddalore, India

  கடலூர் அண்ணாபாலம் அருகில் சிஐடியூ அலுவலகம் முன்பு சிங்காரவேலர் சிலை உள்ளது. நேற்று மீனவர் தினத்தை முன்னிட்டு இந்த சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து, சந்தனம் மற்றும் குங்கும பொட்டு வைத்துள்ளனர். மேலும் சிலையில் பாஜக கொடியையும் கட்டியுள்ளனர்.

  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட சிங்காரவேலர் சிலையை அவமதித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

  மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநகர செயலாளர் அமர்நாத் தலைமையில் அண்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் பலர் கலந்துகொண்டு சிங்காரவேலரின் சிலையை அவமதித்த பா.ஜ.க.வினரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

  Also see... சொந்த வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி

  சிங்காரவேலர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: BJP, Cuddalore