முகப்பு /செய்தி /கடலூர் / தைப்பூசம் : வடலூர் வள்ளலார் ஞானசபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்!

தைப்பூசம் : வடலூர் வள்ளலார் ஞானசபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்!

வடலூர் தைப்பூசம்

வடலூர் தைப்பூசம்

Vadalur Thaipusam | ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Vadalur, India

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைப்பூச திருவிழாவை ஒட்டி ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 152வது தைப்பூச ஜோதி தரிசனம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, மற்றும் கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி ஜோதி தரிசனத்தில் பங்கேற்று வருகின்றனர். சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமச்சாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தொடர்ந்து பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை காலை 5.30 மணி ஆகிய நேரங்களில் 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 800 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Cuddalore, Thaipusam