ஹோம் /நியூஸ் /கடலூர் /

தமிழகத்தில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் பேரணி... பல்வேறு இடங்களில் போலீசார் குவிப்பு!

தமிழகத்தில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் பேரணி... பல்வேறு இடங்களில் போலீசார் குவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

RSS Rally | பேரணி துவங்க இருந்த இடமான திருப்பாதிரிப்புலியூர் பெரியகோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  தமிழகத்தில் இன்று மாலை 3 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

  ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நேற்று அனுமதி அளித்தது.

  இதையும் படிங்க | மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் காவல்துறையின் செயலுக்கு நீதிமன்றம் அதிருப்தி

  ஆனால் சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும் என 11 நிபந்தனை விதித்தது. இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி இன்று மாலை நடைபெறுகிறது. இதற்ககு கடலூர் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். பேரணி துவங்க இருந்த இடமான திருப்பாதிரிப்புலியூர் பெரியகோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடலூர் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் மூலம் சோதனை நடைபெற்று வருகின்றது.

  இதே போன்று கள்ளக்குறிச்சியிலும், பெரம்பலூரிலும் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி மற்றும் அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அப்பகுதிகளிலும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Cuddalore, Rally, RSS