திட்டக்குடி அருகே இரு வேறு சமூகத்தினர் ஒருவருக்கொருவரை கல்வீசி தாக்கிக் கொண்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், துறையூர் கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் அருகில் உள்ள திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை துறையூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக மாணவர்கள் காத்திருந்தனர். அப்போது இருவேரு சமூகத்தை சேர்ந்த இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரவில் இரு மாணவர்களின் உறவினர்களிடையே மோதல் வெடித்தது.
இதில், ஒருவருக்கொருவர் கல் வீசியதுடன், உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இதில் விருத்தாசலம் ஆய்வாளர் முருகேசன் உட்பட நான்கு போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
அத்துடன் இந்த மோதலில் காயமடைந்த 14 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் துறையூரில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tittakudi Constituency, Violence