ஹோம் /நியூஸ் /கடலூர் /

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 3 பெண்கள்.. கொலையா? தற்கொலையா? -போலீஸார் தீவிர விசாரணை

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 3 பெண்கள்.. கொலையா? தற்கொலையா? -போலீஸார் தீவிர விசாரணை

தற்கொலை

தற்கொலை

கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் 8 வயது சிறுமி உட்பட 3 பேரும் குடும்ப பிரச்சனை காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுருநாதன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இறந்து விட்ட நிலையில் சென்னையில் வேலை பார்த்த போது மிஸ்பசாந்தி (35) என்ற பெண்ணுடன் சிவகுருநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் மிஸ்பசாந்தியை சிவகுருநாதன் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.இவர்களுக்கு ஹெலன்கிரேஸ் என்ற மகள் உள்ளார்.

சென்னை போரூர் ராஜீவ்காந்தி நகரில் சிவகுருநாதன் தனது 2-வது மனைவி மிஸ்பசாந்தி, மகள் ஹெலன்கிரேஸ் மற்றும் மாமியார் தெபோரால் கல்யாணி (60) ஆகியோருடன் வசித்து வந்தார்.கடந்த 27-ந்தேதி சிவகுருநாதன் 2-வது மனைவி மிஸ்பசாந்தி, மகள் ஹெலன்கிரேஸ் மற்றும் மாமியார் தெபோரால் கல்யாணி ஆகியோரை அழைத்து வந்து சொந்த ஊரான மலையனூரில் தனியாக வீடு வாடகை எடுத்து இருந்து வந்தார்.

நேற்று இரவு சிவகுருநாதன் ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மனைவி, மகள் மற்றும் மாமியார் 3 பேரும் இல்லாதது கண்டு சிவகுருநாதன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர்களை பல இடங்களில் சென்று தேடினார்.ஆனால் இரவு முழுவதும் தேடியும் அவர்கள் எங்கும் இல்லை.

Also Read: இளைஞரின் தலையை தேடும் போலீஸ்... சிவகங்கையில் அரங்கேறிய கொடூர கொலை

இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் வேல்முருகன் என்பவரின் விவசாய கிணற்றில் மிஸ்பசாந்தி, ஹெலன்கிரேஸ், தெபோரால் கல்யாணி ஆகிய 3 பேரும் பிணமாக மிதந்ததை கண்டு சிவகுருநாதன் அதிர்ச்சியடைந்தார்.

3 பேரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து தாய், மகள், பேத்தி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து போலீசார் சிவகுருநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Commit suicide, Crime News, Cuddalore, Dead, Local News