சிதம்பரம் அருகே கூடுவெளிசாவடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கண்ணகி என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவனை குச்சியால், தலைப்பகுதி மற்றும் கை, மூட்டு பகுதியில் சரமாரியாக தாக்கியும் "போய் தொலைங்க, ஏன் என் உசுரை வாங்க வரீங்க" என்று அவதூராக பேசியும் தாக்கியுள்ளார்.
அவர் தாக்கும் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி உத்தரவிட்டுள்ளார்.
Also see... மீண்டும் பகீர் கொடுக்கும் கொரோனா.. உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை!
மேலும் ஒரு சில தினங்களுக்குள் மாணவனை எதற்காக ஆசிரியை தாக்கினார் என்பது குறித்து உரிய விசாரணை செய்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆசிரியை கண்ணகி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chidambaram, Student, Teacher