முகப்பு /செய்தி /கடலூர் / மது போதையில் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முடியாமல் தவித்த ஆட்டோ டிரைவர்... வீடியோ வைரல்..!

மது போதையில் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முடியாமல் தவித்த ஆட்டோ டிரைவர்... வீடியோ வைரல்..!

மது போதையில் ஆட்டோ ஓட்டுநர்

மது போதையில் ஆட்டோ ஓட்டுநர்

Chidambaram | சிதம்பரம் காசு கடை தெரு பகுதியில் ஆட்டோ டிரைவர் ஒருவர்  மது போதையில் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முடியாமல்  தவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chidambaram, India

சிதம்பரம் அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் கஞ்சிதொட்டி குதிரை வண்டி ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் காசுகடை தெரு பகுதியில் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். ஆட்டோ தானாக நின்றுவிட்டது. அப்போது மீண்டும் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்துள்ளார்.

அப்போதுதான் அவரின் நடவடிக்கை அருகில் இருந்தவர்கள் பார்வைக்கு தென்பட்டது. அவர் அதிகளவு மது போதையில் இருந்ததும் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முடியாமல் பலமுறை முயற்சி செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. தலைக்கேறிய மது போதையால் ஆட்டோ ஸ்டேரிங்கிள் சாய்ந்துள்ளார்.

மேலும் அவர் ஆட்டோவை சில மணி நேரங்களுக்கு பிறகு ஸ்டார்ட் செய்து அதிவேகமாக சென்றது. அங்குள்ள பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Also see... காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு... பூலாம்பட்டி பகுதியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்..!

மேலும் இது போன்ற மது போதையில் வாகனத்தை இயக்கும் ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Auto Driver, Chidambaram, Viral Video