ஹோம் /நியூஸ் /கடலூர் /

கடலூரில் திருவிழாவுக்காக தயாராகும் தென்பெண்ணை ஆறு.. ரெடியா மக்களே?

கடலூரில் திருவிழாவுக்காக தயாராகும் தென்பெண்ணை ஆறு.. ரெடியா மக்களே?

தென்னை பெண்ணை ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி நிர்வாகம்

தென்னை பெண்ணை ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி நிர்வாகம்

Cuddalore River Festivel | தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மலட்டாறு, பரவனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் மக்கள் திரண்டு திருவிழாவுக்கு வருகை தருவார்கள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூரில் நடைபெறவுள்ள ஆற்று திருவிழாவை முன்னிட்டு தென்பெண்ணை ஆறு சுத்தம் செய்யும் பணியை  மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு செய்தார்.  

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி ஆற்று திருவிழாவை வருடந்தோறும் மாவட்ட முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீர்த்தவாரிக்கு ஆறுகளில் சாமி ஊர்வலமாக நேரில் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மலட்டாறு, பரவனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் திரண்டு காலை முதல் மாலை வரை ஆனந்தமாக குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்து வீட்டில் இருந்து சமைத்துக் கொண்டு வரும் உணவுகளை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு தங்களுக்கு தேவையான பொருட்கள், காய்கறி வகைகள் வாங்கிகொண்டு மகிழ்வாக வீட்டிற்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் ஆறுகளிலும் மற்றும் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து மகிழ்ந்து விளையாட உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஆற்று திருவிழாவை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தென் பெண்ணையாறு பகுதிகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

மேலும் பொதுமக்கள் எளிமையாக வந்து செல்வதற்கு சரியான முறையில் சுத்தம் செய்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் ப்ளீச்சிங் பவுடர் தெளித்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் கே. எஸ்.ராஜா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

First published:

Tags: Cuddalore, Local News