Home /News /cuddalore /

கல்வி அதிகாரிகள் ஊதியத்திற்காக வேலை செய்யாமல் மாற்றத்திற்காக பணியாற்றுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

கல்வி அதிகாரிகள் ஊதியத்திற்காக வேலை செய்யாமல் மாற்றத்திற்காக பணியாற்றுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

Cuddalore | மாவட்ட கல்வி அதிகாரிகள் ஊதியத்திற்காக வேலை செய்யாமல் தான் இருக்கும் துறையில் கல்வியில் ஒரு மாற்றத்தை உருவாகிவிட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்பட வேண்டும். - அமைச்சர் அன்பில் மகேஷ்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் உட்பட கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,  ”தற்போது இருக்கும் சூழ்நிலையில் பள்ளி கல்வி துறைக்கு மக்கள் மற்றும் ஊடக்கத்திலும் பாராட்டும் மற்றும் விமர்சனங்களும் வந்து கொண்டுதான் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள சிஇஓ, டிஇஓ ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக்கு நேரடியாக சென்று  அடிக்கடி ஆய்வுகள் நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், “ ஆய்வின் போது சிஇஓ தலைமை ஆசிரியர்களை சிலர் கோபத்துடன் கேள்விகள் கேட்பார்கள். அது தனிப்பட்ட பிரச்னையாக கருதக்கூடாது. பள்ளியின் வளர்ச்சிக்காக என்று கருத வேண்டும்.சிஇஓ-க்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து கற்றல் திறன் குறித்து விவாதிக்க வேண்டும். கற்றல் திறனை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், “ பள்ளிகல்வி துறை நல்ல பெயர் எடுத்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பள்ளி கல்வித்துறைக்கு அவபெயர் ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்று கல்விதுறை அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும். ஒரு பிரச்சினை நடந்தால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்

3 மாவட்டங்களிலும் பின்தங்கிய மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் கடலூர் மாவட்டம். அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும்தான் பள்ளி சிறப்பாக செயல்படுவதாக பேசப்பட்டு வரும் நிலையை மாற்ற தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்” என்றும் கூறினார்.

மேலும், “ மாவட்ட கல்வி அதிகாரிகள் ஊதியத்திற்காக வேலை செய்யாமல் தான் இருக்கும் துறையில் கல்வியில் ஒரு மாற்றத்தை உருவாகிவிட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்பட வேண்டும். அப்போதுதான் ஓய்வு பெறும் போது நிம்மதி கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

Also see... க்யூஆர் கோடு’ ஸ்டிக்கரை ஒட்டி நூதன மோசடி செய்த இளைஞர் கைது...

பின்னர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இறந்த மாணவியின் இல்லத்துக்கு நேரில் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  அவரது  பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cuddalore, Minister Anbil Mahesh

அடுத்த செய்தி