Home /News /cuddalore /

காவிரி ஆத்துல வெள்ளம்போனாலும் கடைமடை வாய்க்கால் வறண்டு கிடக்கு..1.25 லட்சம் கனஅடி நீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குமுறல்

காவிரி ஆத்துல வெள்ளம்போனாலும் கடைமடை வாய்க்கால் வறண்டு கிடக்கு..1.25 லட்சம் கனஅடி நீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குமுறல்

வாய்க்கால்

வாய்க்கால்

கடைமடை பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் வராமல் வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதில் 1.25 லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடைமடை பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதனல் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தையும் இணைக்கும் இடம் கொள்ளிடம். திருச்சி மாவட்டம் அனைக்கரையில் தொடங்கும் கொள்ளிடம் ஆறு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாரில் உள்ள கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் திறந்து விடப்படும் உபரிநீர் திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களின் பாசன தேவையையும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 7 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் இருந்து மழை காலங்களில் வெள்ள உபரி நீர் வடியும் வடிகால் ஆகவும் கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த ஆற்றை நம்பி கரையோரம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பெராம்பட்டு, கீழகுண்டலவாடி, ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நாதல்படுகை, முதலைமேடுதிட்டு  மாதிரவேளூர், குன்னம் உள்ளிட்ட  150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இவர்களின் பிராதான தொழிலாக விவசாயம் விளங்குகிறது. கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தின்  கடைமடை பகுதியான கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரை நம்பி சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில்  விவசாயம் செய்யப்படுகிறது. கர்நாடக, கேரள மாநிலங்களில் பெய்த தென்மேற்கு பருவமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதனால் உபரி நீரானது கொள்ளிடம் ஆற்றில்  திறக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திருச்சி அணைக்கட்டில் இருந்து திறக்கப்பட்ட 1.25லட்சம் கன அடி உபரி  நீரானது சீர்காழி அருகே உள்ள பழைய கடற்கரையில் சென்று வீணாக கடலில் கலக்கிறது. அதே வேளையில் மேட்டூர் அணை திறந்து கடைமடை பகுதியான சீர்காழி பகுதிக்கு இதுவரையில் பாசனம்  வாய்க்கால்களில் சரியான முறையில் தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாய்க்கால்


ஒவ்வொரு வருடமும் திறக்கப்படும் உபரி நீரானது கடலில் சென்று வீணாக கலக்கிறது. அதே வேளையில் பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. தடுப்பணை கட்ட கடந்த ஆட்சிகளில் சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல கோடி ரூபாய்க்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டங்கள் தற்பொழுது செயல்பாட்டிற்கு வராமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

Also see... மேகதாது குறித்து காவிரி மேலாண்மை கூட்டத்தில் ஆலோசிக்க உச்சநீதிமன்றம் அனுமதி..

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் பாசனத்திற்கு இங்கு  வராததால் வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதாகவும், தற்போது கொள்ளிடம் ஆற்றின் வழியே வீணாக சென்று கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க எந்த திட்டங்களும் இல்லாததாலும், இந்த பகுதயில் விவசாயம் அழிந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக அரசு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்க்கால்


மயிலாடுதுறை மாவட்டத்தின் கடை மடை பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை, தடுப்பணை திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும் அவ்வாறு கொண்டு வந்தால் மட்டுமே இந்த பகுதியில் அழிந்து வரும் விவசாயத்தை மீட்டெடுக்க முடியும் என  விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cauvery water, Cuddalore, Delta Farmers

அடுத்த செய்தி