முகப்பு /செய்தி /கடலூர் / சிதம்பரத்தில் பஸ்ஸ்டாப்பில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

சிதம்பரத்தில் பஸ்ஸ்டாப்பில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

சிதம்பரம் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chidambaram, India

சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள பஸ்ஸ்டாப்பில் பள்ளி சீருடையில் இருக்கு மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் ஒருவர் தாலி கட்டி உள்ளார். சீருடையில் மாணவர்கள் இருவரும் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் ஏற்கனவே மாணவரிடம் நேற்று முழுவதும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் இந்த வீடியோவை வெளியிட்ட சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜிகணேஷ் என்பவரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்நிலையில் மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இரண்டாவது நாளாக மாணவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இன்று காலை 8மணி அளவில் மாணவனை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவன் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்த மாணவனை பண்ருட்டியில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

First published:

Tags: Chidambaram, Viral