ஹோம் /நியூஸ் /கடலூர் /

உணவு தேடிச்சென்ற தாய் நாய்.. குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு.. கடலூர் அருகே சுவாரஸ்ய சம்பவம்..!

உணவு தேடிச்சென்ற தாய் நாய்.. குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு.. கடலூர் அருகே சுவாரஸ்ய சம்பவம்..!

நாய் குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு

நாய் குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு

Cuddalore News : கடலூர் அருகே தாய் நாய் உணவு தேடிச்சென்றபோது நல்ல பாம்பு குட்டிகளை பாதுகாத்தது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் அருகே உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவர் வீட்டில் வளர்த்த நாய் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று குட்டிகளை ஈன்றது.

அந்த மூன்று குட்டிகளை தாய் நாய் பாதுகாத்து வந்த நிலையில் இன்று பிற்பகல் தாய்நாய் உணவு தேடி சென்றது. அந்த நேரத்தில் அங்கு வந்த நல்ல பாம்பு மூன்று நாய்க்குட்டிகளையும் பாதுகாக்கும் விதமாக படம் எடுத்து நின்றது.

அதன் பிறகு குட்டிகளிடம் வந்த தாய் நாய் நல்ல பாம்பு படம் எடுத்து நிற்பதை பார்த்து குலைத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. இதனையடுத்து பல மணி நேரம் அந்த நல்ல பாம்பு படம் எடுத்த நிலையிலேயே அங்கு பாதுகாத்து நின்றது. இதனால் தாய் நாய் பால் கொடுக்க முடியாமல் தவித்தது.

இதையும் படிங்க : தமிழ்மீது ஆர்வம்... தமிழரை திருமணம் செய்து வளைகாப்பு கொண்டாடிய அமெரிக்க பெண்!

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் சக்கரை பாம்பு ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து செல்லா அந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது செல்லாவையும் அருகே விடாமல் பாம்பு கடிக்க முயற்சித்தது.

அதனைத்தொடர்ந்து அந்த பாம்பினை லாவகமாக செல்லா பிடித்து அங்கிருந்து புறப்பட்ட பிறகு தாய் நாய் குட்டிகளிடம் வந்தது.

நாய்க்குட்டிகளை படம் எடுத்து நாகப்பாம்பு பாதுகாத்ததை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் ஆர்வமாக பார்த்து சென்றனர்.

First published:

Tags: Cuddalore, Dog, Local News, Snake